ஒளியின் தரம்


ஒளியின் தரம்:


 ஒளியின் நிறம் அல்லது அலைநீளத்தை

ஒளியின் தரம் என்ற சொல் குறிக்கிறது. 

100 நாமீ முதல் 1மிமீ அலைநீளம் உள்ள

கதிர்களை சூரியன் வெளிவிடுகிறது. இது

மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை: 

புறஊதா (100 – 400 நாமீ), கட்புல ஒளி

(400 – 700 நாமீ) மற்றும் அகச்சிவப்பு (700 

நாமீ – 1 மிமீ) ஆகும். மிகக் குறைவான

அ ல ை நீ ள க் க தி ர் , மி க அதிக மா ன

ஆற்றலோடு தொடர்புடையது. 400 – 700 நாமீ

அலைநீளமுள்ள கட்புல ஒளியை மனிதர்களால்

காணமுடியும். இதை கட்புலனாகும் நிறமாலை

(Visible Spectrum) என்று அழைக்கலாம். 

இது ஏழு நிறங்களை உள்ளடக்கியது.

ஒளியின் அலை நீளத்தை அளவிட

பைரனோமீட்டர் (Pyranometer) பயன்படுகிறது. 

பசுந்தாவரங்களால் கட்புலனாகும் நிறமாலையில்

சில அலைநீளங்களை மட்டுமே உள்ளீர்க்க

முடியும் [அதாவது நீலம் (430 – 470 நாமீ) 

மற்றும் சிவப்பு (650 – 730 நாமீ)]. இந்நிறங்கள்

பயிர் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன. 

நீலம் மற்றும் சிவப்பு நிற ஒளியில் வளர்க்கப்பட்ட

தக்காளியில் உற்பத்தி அதிகமானதாக க்

கண்டறியப்பட்டது.

Comments